கீழக்கரை பெட்ரோல் பங்க் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்… குற்றவாளிகள் பிடிபட்டனர்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெட்ரோல் பங்கில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்து 2லட்சம் ரூபாய்கு மேல் பகிரங்கமாக கொள்ளையடித்து சென்றனர். 

இதை தொடர்ந்து கீழக்கரை குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, காவலர் யாசர், காவலர் ஜெய்கணேஷ் , காவலர் திருமுருகன், தனி பிரிவு காவலர் சேகர் உள்ளிட்டோர் தீவிர தேடுதலின் அடிப்படையில் இன்று (16/09/2021) கைது செய்தனர்.

இவர்கள் ராஜேஷ் (21) த/பெ காமராஜ்,   நிமல் ராஜ் (21)   த/பெ கருப்பையா,  பாலமுருகன் (எ) இம்தியாஸ் (21)  த/பெசுப்பிரமணி.  மேலும் இவர்கள் நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்கொள்ளையர்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனம்,  3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. மேலும் அவர்களுடன் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal