Home செய்திகள் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது .

உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது .

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களை குறிவைத்து , அவர்களிடம் அரசின் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி , மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .மர்ம நபர்கள் சிலர், முதியோர் உதவித்தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை, வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறி, கிராமப்புறத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களை குறிவைத்து, அவர்களிடம் நேரில் சென்று அரசின் உதவித்தொகை பெற புகைப்படம் எடுப்பதாக கூறி , அவர்கள் காது மற்றும் மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அப்புறப்படுத்த கூறி, புகைப்படம் எடுத்ததுடன் அந் நகைகளை அனைத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து மாயமாகி வருவதாக சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்,திருமங்கலம் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோபி ,மாரிகண்ணன். தலைமை காவலர் ராஜா கார்த்திக் இந்த நபர்களை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டு வலை வீசிய நேரத்தில், விருதுநகரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மதுரை திருப்புவனம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) மற்றும் திருமங்கலம் மரவன்குளம் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(36) ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில், இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர் .அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க நகைகளை மீட்டனர். இதுபோன்ற மோசடி சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!