பொது மக்களின் பயன்பாட்டிற்காக 3கி.மீ தூரம் கண்மாய்கரை பாதையை தன் சொந்த செலவில் சீரமைத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பன்னியான் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.செக்காணத்திலிருந்து பன்னியான் கிராமத்திற்கு சாலை வசதி இருந்த போதும் இக்கிராம மக்களின் பெரும்பாலனோர் தோட்டம் மற்றும் மற்ற கிராமங்களுக்கு செல்வதற்கு கிராம கண்மாய் கரை பாதையையே உபயோகப் படுத்தி வந்தனர்.நாளடைவில் இப்பாதை சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்கள் படர்ந்து கிராம மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்துள்ளது

.மேலும் கண்மாய்க்குள் இறங்கி பாதையாகப் பயன்படுத்தி வந்தாலும் மழைக்காலங்களில் கண்மாய்க்குள் இறங்கிச் செல்ல முடியாது என்பதால் பொது மக்களின் போக்குவரத்திற்கு பிரதானமாக உள்ள இந்த கண்மாய் கரைப் பாதையை சீரமைக்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் மனு அளித்துள்ளனர்.ஆனால் மனுவை பரிசீலித்த அதிகாரிகள் ஊராட்சியில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் இவ்வேலையை உடனடியாகச் செய்ய முடியாது எனக் கைவிரித்துள்ளனர்.இத்தகவல் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனுக்குத் தெரிவிக்கப்பட அவர் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அய்யப்பன் தனது சொந்த செலவிலேயே கண்மாய்கரைப் பாதையை சீரமைக்க முடிவு செய்தார்.இதன்படி சுமார் 3 கி.மீ நீளமுள்ள கிராமமக்கள் பயன்படுத்தும் பன்னியான் கண்மாய் கரைப்பாதை சீரமைககப்பட்டு வருகின்றன. சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு முட்புதற்கள் அகற்றப்பட்டு பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்றது.இப்பாதை சீரமைப்பிற்காக ஆகும் செலவு ரூ5 லட்சத்தை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிராம மக்களின் தேவையறிந்து மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..