கலசபாக்கம் அருகே மக்களை தேடி மருத்துவம் சார்பில் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி இந்திய மருத்துவம் சார்பில் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கஸ்தூரி ஆலோசனைப்படி. மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் கே. பார்த்திபன் தலைமையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கியும் கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் வெளியே செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கினார் நோய் எதிர்ப்பு சக்தி உடைய ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மருத்துவ அலுவலர் பார்த்திபன், மேலும் இந்நிகழ்ச்சியில் மேல்வில்வராயநல்லூர் மருத்துவமனையில் மூலிகை மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது பின்னர் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார் மேலும் உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், சுகாதார பணியாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனைவரும் பங்கேற்றனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..