பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுமா பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் அரசு பேருந்துகள் கூடுதலாக மாணவர்களுக்கு என இயக்கப்படுமா .

மதுரை மாவட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி 9/10/11/12 வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானா தொற்று காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன தற்பொழுது தமிழகத்தில் கொரானா தொற்று குறையத் தொடங்கிய காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஸ்ருதி என்கின்ற பள்ளி மாணவி தனியார் பள்ளி பேருந்தில் பயணிக்கும் பொழுது பள்ளி பேருந்தில் உள்ள துளை வழியாக கீழே விழுந்து சக்கரம் ஏறி உயிரிழந்தார் இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிவிலும் அனைத்து பள்ளி பேருந்து மற்றும் வேன் அனைத்தையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்டோர் சோதனை செய்த பிறகு தகுதி சான்றிதழ் அளித்த பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள் இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்க இருப்பதால் எந்த ஒரு பள்ளி வாகனத்தையும் சோதித்த தெரியவில்லை உடனடியாக மாவட்ட நிர்வாகமும் இயக்கப்படும் பள்ளிப் பேருந்துகளை கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பேருந்துகளை எடுக்காமல் இருப்பதால் என்னென்ன பழுது இருக்குமோ என அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர் மேலும் பள்ளிப் பேருந்துகளின் செல்லாத பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி துவங்கும் நேரம் பெறும் பள்ளி முடியும் நேரதில் அதுவும் இலவசமாக அரசு பேருந்து தனியாக இயக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது அப்போதுதான் தொடரில் இருந்து குழந்தைகளை கொரானா தொற்று இருந்து காக்க முடியும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப் படுமா பள்ளி மாணவர்களுக்கு என தனியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..