Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் பல்வேறு தொண்டு அமைப்புகள் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்..

கீழக்கரையில் பல்வேறு தொண்டு அமைப்புகள் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்..

by ஆசிரியர்

கீழக்கரை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளை அகற்றும் மாதாந்திர தொடர் பணியில் ஆழி என்ற அமைப்புடன், Clean kilakarai Trust இணைந்து கீழக்கரை நகராட்சி சேர்ந்த ஊழியர்கள் உதவியுடன் முதல் கட்ட பணி நடைபெற்றது, இதில் MASA சமுகநல அமைப்பு மற்றும் ஸ்டைலிஷ் கீழக்கரை பங்கு பெற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கீழக்கரை நகராட்சி கமிஷ்னர் பூபதி உபகரணங்கள் வழங்கி பணியை துவங்கி வைத்தார், MASA தலைவர் அஹமத் முஹைதீன், Clean Kilakarai Trust Managing Trustee மற்றும் MASA vin munnal தலைவர் செய்யது அபுசாலிஹு, clean kilakarai டிரஸ்டி உதுமான் யாசிர், ஸ்டைலிஸ் கீழக்கரை ஜாவித், ஆழி அமைப்பின் பிரவின், அகில்ரிஷி, சண்முகவேல், உதயா மற்றும் நகராட்சி பணியாளர்கள் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

இது குறித்து ஆழி அமைப்பினர் கூறியதாவது, “கீழக்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் ஆமைகள் வருவதும் முட்டை இட்டு குஞ்சி பொரித்து செல்லும் நிலை இருந்து உள்ளது.. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதால் ஆமைகள் அதை உண்டு இறந்து கரை ஒதுங்கும் நிலை அதிகரித்து வருகிறது. ஆமைகள் சுத்தமான சுகாதாரமான நிலையை தேர்வு செய்து இன பெருக்கம் செய்வது இயல்பு. தற்போது உள்ள கடற்கரையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அதிகம் கடலில் கலந்து கடலை மசு படுதுவதுடன் கடல் வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாகி விடுகிறது.. இதனை தடுக்கவிட்டால் கடல் வளம் குறைந்து பாதிப்புகள் அதிகம் ஆகிவிடும். அதனை தடுக்க வேன்றும் என்றால் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சாக்கடை நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும்..

ஆழி மூலம் மாதாந்திர கடல் கரை சுத்தம் செய்யும் முற்சியை clean kilakarai அமைப்பு மற்றும் இதர சமூக அமைப்புகளுடன் இணைந்து செய்ய உள்ளோம். அதன் முன்னோடியாக இன்று முதல்கட்டம் சுத்தம் செய்ய பட்டது. வரும் செப்டம்பர் 18 உலக சுத்தம் செய்யும் நாள் என்பதால் அன்று மிக பெரிய அளவில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் இதர volunteers உதவியுடன் kilakarai கடற்கரை முழுவதும் சுத்தம் செய்ய உள்ளோம். இது மாதம் மாதம் நடைபெறும்” என்றார்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!