Home செய்திகள் மதுரை – செங்கோட்டை இடையே 30-ம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்.

மதுரை – செங்கோட்டை இடையே 30-ம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்.

by mohan

மதுரை ரயில் நிலையத்தில் இருந்துபயணிகளின் வசதிக்கென மதுரை செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி வண்டி எண் 06504 மதுரை – செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்று சேருகிறது.மறு மார்க்கத்தில் வண்டி எண் 06503 செங்கோட்டை – மதுரை விரைவு சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.10 மணிக்கு மதுரை வந்து சேர்ந்திடும்.இந்த ரயில்களில் பயணிகளின் வசதிக்கென 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.இந்த தினசரி சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!