Home செய்திகள் இந்தியன்ஆயில்சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நிதி உதவி .

இந்தியன்ஆயில்சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நிதி உதவி .

by mohan

மதுரை,  அரசு பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற நான்கு மாணவிகளுக்கு தலா ரூ.10,000 ஒரு முறை ஸ்காலர்ஷிப்-க்கான காசோலைகளை, ஒவ்வொரு மாநிலத்திலும், போர்டு தேர்வுகளில் அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற, அதிக அளவில் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு சார்ந்த 75 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கி வருகிறது. மாவட்டத்திற்கு இரண்டு மாணவிகள் விதம் தொகை வழங்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள மாணவிகளுக்கு மொத்த கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி இந்தியன்ஆயில் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.சிறைச்சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வை நல்லமுறையில் சீரமைத்துக் கொள்ள உறுதுணை புரியும் வகையில், சிறைவாசிளுக்கு குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, இந்தியன்ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் என்கிற முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த கட்டமாக பிற மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.இந்தியாவெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பேட்மிண்ட்டன், கைப்பந்து, செஸ், டென்னிஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். நான்கு வார கால பயிற்சியின் போது, 129 சிறைக்கைதிகளுக்கு, மனமகிழ்ச்சிக்கு என்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும் விளையாட்டுகளின் அடிப்படை அம்சங்களும் நுணுக்கங்களும் கற்றுத் தரப்படும். இந்த கற்றல் முயற்சிகளின் மூலமாக, பங்கேற்பவர்களின் தன்னம்பிக்கையும் சுய கம்பீரமும் மேம்படும். இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய விளையாட்டு உபகரணங்களையும் சாதனங்களையும் இந்தியன்ஆயில் நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த பயன்மிக்க முன்முயற்சியை, சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீகாந்த் மாதவ் வைத்யா அவர்கள், இந்தியன்ஆயில் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) – தென் மண்டலம் K. சைலேந்த்ரா, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் ஜெயதேவன், புழல் மத்திய சிறைச்சாலையின் காவல்துறை துணைத் தலைவர் (சிறைகள்) முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும் இந்தியன்ஆயில்/ காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!