Home செய்திகள் மதுரை மாநகராட்சிநல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மதுரை மாநகராட்சிநல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

by mohan

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர். முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் , நல்லிணக்க நாள் உறுதி மொழியினை, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நல்லிணக்க நாள் உறுதிமொழிநான் சாதி, இன, வட்டார, மதம் அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக் கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என, ஆணையாளர் வாசிக்க, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதனைப் போன்று அனைத்து மண்டல அலுவலகங்கள், மைய அலுவலகத்திலும் முதல்நிலை அலுவலர்கள் முன்னிலையில், அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர்முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!