Home செய்திகள் இராஜபாளையத்தில் விநாயகர் சிலை தயார் செய்ய தடை. தடையை திரும்ப பெற தமிழக அரசுக்கு ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை

இராஜபாளையத்தில் விநாயகர் சிலை தயார் செய்ய தடை. தடையை திரும்ப பெற தமிழக அரசுக்கு ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் மும்பைக்கு அடுத்தபடியாக இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெறும்.அதே நேரத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நலிந்த வசதியற்ற பெண்களுக்கு இலவசமாக திருமணம் சீர்வரிசை என விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள் .கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது .விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே சிலை தயார் செய்யும் பணி துவங்குவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் சிலை தயார் செய்யும் பணி துவங்குவதற்கு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று வேலை நடந்தத இராஜபாளையம் மாயூரநாதர் சாமி திருக்கோவில் அறநிலை துறை அதிகாரியாக ( E0) மகேந்திரன் சிலை செய்வதற்கு அனுமதி இல்லை என தடை விதித்துள்ளதால் சிலை செய்யும் பணி பாதியில் நின்று உள்ளது.

ஆகையால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடிய சிற்பிகள் மற்றும் ஒவியர்கள் சிறு விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபடக்கூடிய தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதற்கு விநாயகர் சிலைகள் தயார் செய்ய தடை விதிக்கக் கூடாது எனவும் .இந்த பணியில் ஈடுபடக் கூடிய சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக நண்பர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.விநாயகர் சிலை செய்ய தடை விதிக்கக்கூடாது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அரசு உத்தரவின்படி அரசு விதித்த கட்டுப்பாடு உடன் நடைபெறும் அதற்கு நான் உறுதி அளிக்கிறோம் ஆகையால் அரசு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!