Home செய்திகள் தென்காசி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற 75-வது சுதந்திரதின விழா..

தென்காசி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற 75-வது சுதந்திரதின விழா..

by mohan

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஐ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிமைதானத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தேசிய கொடியினை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 78 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களைவழங்கினார். இவ்விழாவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், தென்காசியிலுள்ள சாந்தி தனியார் மருத்துவமனைக்கும் நற்சான்று வழங்கப்பட்டது. மேலும், காவல் துறையில் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர், காவலர் உள்ளிட்ட 15 நபர்கள், பஞ்சாயத்து, நகராட்சி, பேரூராட்சிகளை சார்ந்த 30 தூய்மை பணியாளர்கள், 1 உதவி மருத்துவர், கிராம சுகாதார செவிலியர் 9 நபர்கள், பொதுப் பணித்துறையில் 2 உதவிப்பொறியாளர்கள், 108 அவசர ஊர்தியில் பணியாற்றும் 2 மருத்துவ நுட்புனர்கள், அவசர கால ஊர்தி ஒட்டுநர் 2 நபர்கள், மாவட்ட சித்த மருத்துவத்துறையில் சித்த மருத்துவர், மருந்தாளுநர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 3 நபர்கள், வருவாய்த்துறையில் 6 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையில்ஒன்றிய பணி மேற்பார்வையாளர் 3 நபர்கள், ஊராட்சி செயலர் 3 நபர்கள் என ஆக மொத்தம் 78 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்..இந்த விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிநாடார், மாவட்ட வருவாய்அலுவலர் ஜனனி சௌந்தர்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தென்காசி கோட்டாட்சியர் ராமசந்திரன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன்,தென்காசி (தெற்கு) மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி (வடக்கு) மாவட்டசெயலாளர் செல்லத்துரை, தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு தலைவர் பி.ஷமீம் இப்ராஹிம், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!