Home செய்திகள் நெல்லையில் எட்டு மணி நேரம் கடம் வாசித்து கொரோனா விழிப்புணர்வு;10ஆம் வகுப்பு மாணவர் சாதனை..

நெல்லையில் எட்டு மணி நேரம் கடம் வாசித்து கொரோனா விழிப்புணர்வு;10ஆம் வகுப்பு மாணவர் சாதனை..

by mohan

நெல்லையில் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர் தருண் செல்வம் எட்டு மணி நேரம் கண்ணை கட்டி கொண்டு தொடர்ந்து கடம் வாசித்து சாதனை புரிந்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மகன் தருண்செல்வம். இவர் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக புதிய சாதனையை தொடங்கியுள்ளார். தொடர்ந்து கண்ணைக் கட்டிக் கொண்டு 8-மணிநேரம் கடம் வாசித்து சாதனை படைத்துள்ளார். கொரானா காலங்களில் அரசு பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் தானும் மக்களுக்கு கொரானாவை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இச்சாதனையை புரிந்துள்ளார்.மேலும் கடந்த ஆண்டு இதேபோல பழவூரில் 12மணிநேரம் கண்ணை கட்டி கொண்டு தொடர்ந்து தவில் வாசித்துள்ளார். மேலும் ஞானகுரு அறக்கட்டளை சார்பில் 2019-20க்காக அப்போதைய அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் சாதனை தமிழன் விருதும், அதே ஆண்டில் கலைரத்னா விருதும் பல்வேறு இசை போட்டிகளில் முதல் பரிசும் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து தருண்செல்வம் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரியும் டாக்டர் அப்துல் ஹலீம் கூறும்போது தருண் செல்வம் கொரானாவை தடுக்கும் வகையில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்ணைகட்டி தொடர்ந்து எட்டு மணிநேரம் கடம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். மேலும் இதற்கு முன்பு 12மணிநேரம் தவில் இசையையும் வாசித்து சாதனை படைத்துள்ளார். தருண் எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைப்பான் என்றார். மாணவன் தருண்செல்வம் கூறும் போது கொரானாவால் பல்வேறு கஷ்டங்களை அடைந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையால் தொடர்ந்து மாஸ்க் அணிந்து கடம், தவில் போன்ற இசை கருவிகளை வாசித்து வருகிறேன். இதற்கு உறுதுணையாக எனது பெற்றோர் பள்ளி இசை ஆசிரியர் டாக்டர் அப்துல் ஹலிம் ரிச்சர்டு ஆகியோரின் முயற்சியால் சாதனை படைக்க முடிந்தது. அனைவரும் மாஸ்க் அணிந்து கொரானாவை தடுக்க வேண்டும் என்றார். மாணவர் தருணை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஊர்பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!