Home செய்திகள் மதுரை டாக்டர் மீனாட்சி சுந்தர் இயற்றிய கொரனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைர லாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் பாராட்டு.

மதுரை டாக்டர் மீனாட்சி சுந்தர் இயற்றிய கொரனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைர லாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் பாராட்டு.

by mohan

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியிலுள்ள மகப்பேறு டாக்டர்மீனாட்சி சுந்தர் கொரோனாவின் 3-வது அலை பற்றிய பாடலை பாடி பொதுமக்கள் மத்தியில் கொரனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரனா வைரஸ் தாக்கத்தால் மக்களை மிகவும் பாதிப்பு அடைய செய்து வருகிறது.தற்போது கொரனாவின் 3வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனாலும் மக்கள் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.அதனால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துப் படுத்தும் விதமாகவும் டாக்டர் மீனாட்சி சுந்தர் ஒரு கொரனா விழிப்புணர்வு பாடலை இயற்றி அவருடைய மகள் ஜெய்ஸ்ரீ சுந்தர் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வளைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.இதுகுறித்து டாக்டர் .மீனாட்சி சுந்தர் பேட்டியளிக்கும் போது, கடந்த கொரனாவில் என்னுடைய கணவரை இழந்து விட்டேன். அதனால் மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். மக்கள் மீண்டும் கொரனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும்மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவே,தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டுமென்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும், முககவசம் அணிய வேண்டும் என்றும்.எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கொரனாவின் 3-வது அலையை ஒழிக்க வேண்டும் .அதற்காக இந்த விழிப்புணர்வு பாடலை எழுதினேன் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!