செங்கத்தில் 3லட்சத்தை வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் செங்கம் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதகராக பணியாற்றி வந்தார் இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றார் ஓய்வுபெற்ற இவர் தனக்கு அரசு வழங்கிய 3 லட்ச ரூபாய் ஓய்வூதிய தொகையை செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதா ஸ்டேட் வங்கியில் எடுத்துக்கொண்டு தான் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு நபர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளே சென்று கொண்டிருந்தபோது அருகே சென்று அவர் கையில் வைத்திருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்இது சம்பந்தமாக மனோகரன் செங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் தகவலின் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தார்இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகிரி ஓரந்தாங்கள் கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த தங்கையா மற்றும் ஓஜிகுப்பத்தை சேர்ந்த கோவிந்தராஜுலு ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலமையிலான தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 3 லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டு செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்அப்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் நடந்து சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இடமிருந்து 3 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்து கொள்ளையடிக்கப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்ட திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டிக்கு செங்கம் பகுதி மக்கள் பெரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..