இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி பெறலாம்;ஐ.ஏ.எஸ் வழிகாட்டு நிகழ்ச்சியில் தென்காசி எஸ்.பி.பேச்சு..

செங்கோட்டையில் நடைபெற்ற IAS தேர்விற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வெற்றி பெரும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது இலக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் கொண்ட கொள்கையில் உறுதியாக தனது இலக்கினை நோக்கி பயணம் செய்தால் கட்டாயம் வெற்றியை பெற முடியும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசினை வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal