சுரண்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பயிற்சி முகாம்; வியாபாரிகள் பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், ராஜேந்திர குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பொறியாளர் கோபி, வியாபாரிகள் சங்க தலைவர் செயலாளர் கே டி நடராஜன், துணைத் தலைவர் சிவசக்தி முத்தையா, இணைச் செயலாளர் எஸ்கேடி துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் முன்னாள் கவுன்சிலர் அன்னப்பிரகாசம், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப், பொருளாளர் அழகுசுந்தரம் உள்ளிட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பதில் வியாபாரிகளின் முக்கிய பங்கு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம், வாடிக்கையாளர்கள் கொரோனா நடவடிக்கையை பின்பற்ற வணிக நிறுவன உரிமையாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாக அதிகாரி வெங்கட கோபு பேசினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..