கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி டிரைவர் தப்பி ஓட்டம் .

மதுரை மாவட்டம் மேலூர் மதுரை திருச்சி சத்தியபுரம் நான்கு வழிசாலை டெம்பிள் சிட்டி ஹோட்டல் அருகே விருதுநகரிலிருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலூர் சத்தியபுரம் நான்கு வழிச்சாலை அருகே சூவஞ்சான்பட்டி சேர்ந்த கௌதம் 23 என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலையில் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தாழ்வான தடுப்புச்சுவரை மழை நீர் செல்லும் பாதையில் சாலையை கடக்க முயன்றார் அப்பொழுது எதிர்பாராதவிதமாக விருதுநகரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் கௌதம் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர் மேலும் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.முதல்கட்ட விசாரணையில் இருசக்கர வாகன ஓட்டி தவறான பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal