விளாச்சேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தல்., மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை கிராம நிர்வாக அலுவலர் திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில்., மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி அருகே கண்மாய் கரையோரப் பகுதியில் உள்ள செம்மண்களை சட்ட விரோதமாக அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து., இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் விசாரணைக்காக காவல் துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.போலீசார் விசாரணையில் லாரியின் உரிமையாளர் பசுமலையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வயக்காட்டு சாமி(40), லாரி ஓட்டுநர் முனியாண்டி புரத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது மகன் சிவமூர்த்தி(30), ஓட்டுனருக்கு உதவியாக இருந்த கிளீனர் விளாச்சேரி சேர்ந்த பால்பாண்டி மகன் வீரபிரபு(22) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மணல் அல்ல பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal