செவ்வாய் கோளின் ஆய்வுக்காக பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி விண்ணுக்கு ஏவப்பட்ட தினம் இன்று (ஆகஸ்ட் 4, 2007).

பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. பீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008ல் செவ்வாயில் இறங்கியது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்தது. பீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.பீனிக்ஸ் தளவுளவியில் அமைந்துள்ள கருவிகள்1. சுயமாய் இயங்கும் இயந்திரக் கரம் (Robotic Arm)ஏழரை அடி ஆழம் வரைச் செவ்வாய்த் தளத்தில் குழி தோண்டும் வலிமை பெற்றது. சோதனைக் கருவிகளை எடுத்துத் தகுந்த இடத்தில் வைக்கும். மண் மாதிரிகளை ஆய்வு செய்ய மற்ற கருவிகளுக்கு மாற்றம் செய்யும். 2. இருபுறத் தளக்காட்சிக் காமிரா (Surface Stereoscopic Imager)தளவுளவியில் ஓங்கி நிற்கும் கம்பத்தில் அமைந்திருக்கும் காமிரா செவ்வாய்ச் சூழ்வெளியின் கண்கொள்ளாக் காட்சியைப் படமெடுக்கும். மற்ற காமிரா தளமண் வண்ணத்தைப் படமெடுக்கும்.3. காலநிலைக் கண்காணிப்பு நிலையம் (Meteorological Station)செவ்வாய்த் தளத்தின் உஷ்ணம், அழுத்தம், வாயு வேகம் ஆகியவற்றைக் குறித்து இரவு பகல் வேளைகளில் காலநிலைகளைப் பதிவு செய்யும் ஏற்பாடு.4. நுண்ணியல் அளவி, மின்னியல் இரசாயன உளவி, வெப்பக் கடத்தி உளவி (Microscopy, Electrochemistry & Conductivity Analysers)செவ்வாய் மண் மாதிரிகளைச் சோதிக்கும் நான்கு இரசாயனக் கருவிகள்.5. செவ்வாய்க் கீழ்த்தளக் காட்சிக் காமிரா (Mars Descent Imager) விண்ணூர்தியிலிருந்து தளவுளவி பிரிந்து, செவ்வாய்த் தளத்தின் ஈர்ப்பாற்றலில் இறங்கும் போது, எப்படி இயங்கித் தடம் வைக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் சாதனம்.6. வெப்பம், வாயு வெளிவீச்சு உளவி (Thermal & Evolved Gas Analysers)கார்பன் அடிப்படை மாதிரிகளைக் (Organic Samples) கண்டுபிடித்து, இரசாயனப் பண்புகளைச் சோதிக்கும் சாதனம்.செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம்.பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008ல் செவ்வாயில் இறங்கியது. பீனிக்ஸ் செவ்வாய் வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட 21,000 கிமீ/மணி (13,000 மைல்) வேகத்தில் நுழைந்தது. மேலும் 7 நிமிடங்களுக்குள் அதன் வேகத்தை 8 கிமீ/மணி (5.0 மைல்) ஆகக் குறைத்தது. மாலை 4:46 மணிக்கு வளிமண்டல நுழைவு உறுதி செய்யப்பட்டது. மாலை 4:53:44 மணிக்கு ரேடியோ சிக்னல்கள் பெறப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் லேண்டர்களுடன் பார்வையிட்ட வேறு சில இடங்களைப் போலல்லாமல், பீனிக்ஸ் அருகே உள்ள அனைத்து பாறைகளும் சிறியவை. கேமரா பார்க்கும் வரையில், நிலம் தட்டையானது, ஆனால் 2-3 மீ (6.6-9.8 அடி) விட்டம் கொண்ட பலகோணங்களாக வடிவமைக்கப்பட்டு 20 முதல் 50 செமீ (7.9 முதல் 19.7 இன்) ஆழத்தில் உள்ள பள்ளங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த வடிவங்கள் மண்ணில் உள்ள பனி விரிவடைவதாலும், பெரிய வெப்பநிலை மாற்றங்களால் சுருங்குவதாலும் ஏற்படுகிறது. பலகோணங்களின் மேல் உள்ள மண் தட்டையான துகள்கள் (அநேகமாக ஒரு வகை களிமண்) மற்றும் வட்டமான துகள்களால் ஆனது என்பதை நுண்ணோக்கி காட்டியது. மேலும், செவ்வாய் கிரகத்தில் பார்வையிட்ட மற்ற இடங்களைப் போலல்லாமல், தளத்தில் குன்றுகள் இல்லை. பலகோணங்களின் நடுவில் பனிக்கட்டி சில அங்குலங்கள் கீழே உள்ளது, அதன் விளிம்புகளில் பனி குறைந்தது 20 செமீ (8 அங்குலம்) ஆழத்தில் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பனி வெளிப்படும் போது அது மெதுவாக உயர்ந்தது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..