Home செய்திகள் நிலக்கோட்டை அருகே சாதிச்சான்று வழங்க மறுத்த வி. ஏ. ஓ . மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவன் மனு.

நிலக்கோட்டை அருகே சாதிச்சான்று வழங்க மறுத்த வி. ஏ. ஓ . மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவன் மனு.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம், பொம்மணம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ரதிஷ் பாண்டியன் வயது 22. இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. எஸ். சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளார். அதன்பின்னர் எம். எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் மேற்படிப்பு படித்து வருகிறார். தற்போது தமிழக அரசு வழங்கும் மேற்படிப்புக்கான உதவித் தொகை  பெறுவதற்காக விண்ணப்பம் செய்வதற்கு தேவையான கல்விச் சான்று வருமானச் சான்று இருப்பிடச் சான்று , சாதிச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் கொடுப்பதற்காக இ சேவை மையம் மூலம் இங்கு தேவேந்திரகுல வேளாளர் சாதி சான்று கேட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒரு இ சேவை மையத்தில் மனு செய்தார். அவ்வாறு மனு செய்த போது இ. சேவையில் தனது தந்தை கருப்பையா நிலக்கோட்டை தாசில்தாரிடம் முறையாக பெற்ற சாதிச்சான்று 1985ஆம் ஆண்டு வாங்கிய ஒரிஜினல் சாதிச்சான்று, தனது பெயரில் ஏற்கனவே வாங்கிய சாதிச்சான்று 2008 ஆம் ஆண்டு வாங்கிய ஒரிஜினல், மற்றும் முகவரிக்கான ஒரிஜினல் ஆதார் அட்டை, ஒரிஜினல் ரேஷன் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஒரிஜினல் இ சேவை மைய ஆப்பரேட்டர்கள் முறையாக ஸ்கேன் செய்து முறையாக அரசுக்குச் செலுத்தக்கூடிய கட்டணம்  செலுத்தி சாதிச் சான்று விண்ணப்பம் செய்தார். அதனை எந்தவித விசாரணையுமின்றி நிலக்கோட்டை தாலுகா ஒருத்தட்டு கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆஜராகவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார். சாதிச் சான்று கேட்டு மனு செய்த மனுவை தள்ளுபடி செய்த  ஒருத்தட்டு கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் ஏற்கனவே மனு  செய்து இருந்தார் . இந்நிலையில் நேற்று மதியம் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடியை பார்த்து சாதிச்சான்று வழங்க மறுத்த ஒரு தட்டு கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் மனு கொடுத்தார். இதனை விசாரித்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்  ஆகியோர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டு  விரைந்து நடவடிக்கை எடுத்து  சாதி சான்றிதழை வழங்கினார். அப்போது உடன் கோடாங்கி நாயக்கன்பட்டி சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர் ராஜதுரை, பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி உடனடியாக சாதிச்சான்றிதழ் கல்லூரி மாணவருக்கு வழங்கிய போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!