Home செய்திகள் மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கிய வைப்பு.

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கிய வைப்பு.

by mohan

மதுரை மாநகராட்சிகொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திதுவக்கி வைத்தார்.மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,ஆகியோர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, இன்று (01.08.2021) துவக்கி வைத்தார்.அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா மூன்றாவது அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை நேற்றைய தினம் சென்னையில் துவக்கி வைத்தார்கள். அதன்படி ,மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப்புறம், நகர்ப்புறங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருக்கும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், கைகளை சோப்புக் கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு தொடர்பான பிரச்சார நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ,மதுரை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்த பிரச்சாரத்தின் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரயில்நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மாணவர்களுக்கு குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம்.ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி, மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர்; வழங்குதல் மற்றும் கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று, கொரோனா தொற்றினை முற்றிலும் தடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.முன்னதாக, அமைச்சர் தலைமையில், கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதனை நான் அறிவேன், அதனை தவிர்க்க, 1) பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன். 2) மற்றவர்களிடமிருந்து குறைந்த பட்சம் 6 அடி இடைவெளியினை கடைப்பிடிப்பேன். 3) சோப்பும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன். 4) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவேன். 5) இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நான் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பேன். 6) மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவேன். 7) கொரோனா மூன்றாம் அலையினை தடுக்க எப்பொழுதும், விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். என்று அனைவரும் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர்செந்தில்குமாரி, நகர்நல அலுவலர் மரு.குமர குருபரன், உதவி ஆணையாளர்பிரேம்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார்,மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்வினோத், சுகாதார அலுவலர்ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!