டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு – இந்திய ரயில்வே துறை அறிவிப்பு.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களும் பங்கேற்கின்றனர். இதில், 25 பேர் தடகளத்திலும், 5 பேர் பயிற்சியாளராகவும், 1 பிசியோதெரபி பயிற்றுநர் என மொத்தமாக 20% இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் சார்பில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய ரயில்வே துறையின் சார்பாக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரயில்வே துறை சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. இதில், தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வெள்பவர்களுக்கு 1 கோடியும் அறிவித்துள்ளது.மற்ற, விளையாட்டு வீரர்களுக்கு 7.5 லட்சம் முதல் 35 லட்சம் வரையும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு தனித்தனியாக 7.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..