Home செய்திகள் பாலமேடு பகுதியில் அதிகளவில் விலையும் நாவல் பழங்கள். குளிர்பதன கிடங்கு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

பாலமேடு பகுதியில் அதிகளவில் விலையும் நாவல் பழங்கள். குளிர்பதன கிடங்கு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

by mohan

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி ஆதனூர் வெள்ளையம்பட்டி சரந்தாங்கி மேட்டுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500 ஏக்கர் அளவில் விவசாயிகள் நாவல் பழ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் நாவல் பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழசந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். 35 கிலோ எடையுள்ள நாவல் பழம் ரூ.1500 முதல் ரூ.25000 வரை விலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அதிகளவில் நாவல் பழங்கள் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால் சந்தையில் விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள நாவல் பழங்கள் ரூ. 400 முதல் ரூ. 500 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மேலும் இப்பகுதியில் அதிகளவில் விளையும் நாவல் பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நாவல் பழங்கள் 2 அல்லது 3 மாதங்கள் சீசனில் விளையும் பழங்கள் ஆகும் இதனால் தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் நாவல் பழங்களை தடுத்து உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!