கீழக்கரை கிழக்குத்தெரு, கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு சுகாதார துறையினருடன் இணைந்து நடைபெற்ற தடுப்பூசி முகாம்..

கீழக்கரை கிழக்குத்தெரு, கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு சுகாதார துறையினருடன் இணைந்து அனைத்து சமுதாய இருபாலருக்குமான 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்  (24:07:2021) அன்று காலை சுமார் 10:30 மணி முதல் பகல் சுமார் 2:00 வரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் கீழக்கரையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இந்த நிகழ்வு டாக்டர். ராசிக்தீன் முன்னிலையிலும், இன்ஞினியர் கபீர் ஒருங்கிணைப்பிலும் KMT நண்பர்களால் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.  முதலில் வந்த 500 பயனர்களுக்கு அறக்கட்டளையின் தலைவர் மர்ஹூம். ஆசிக் நினைவாக சிறப்புப் பரிசு KMT அறக்கட்டளை சார்பாக அவருடைய சகோதரர் தொழிலதிபர் ஆரிப் மூலம் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 593 பேருக்கு மிகப்பெரிய அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.