கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை;சுரண்டை பகுதி ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரண்டையில் நடந்த ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வந்த தென்காசி ஆர்டிஓ ராஜேந்திரன் அண்ணா சிலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் சமுக இடைவெளியை பயன்படுத்துதல் குறித்து விளக்கினார். தொடர்ந்து முககவசம் அணியாமல் பணிபுரிந்த கடைகளில் அபராதம் விதித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்டிஓ கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், அபாயம் குறையவில்லை, ஆகவே பொதுமக்களும், வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ், ஆர்ஐ மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal