தென்காசியில் முக்கிய ஆலோசனை கூட்டம்; அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடிவு..

பிரிவினைகளை தூண்டக்கூடிய நபர்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணித்து எல்லா காலங்களிலும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தென்காசி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.தென்காசி பஜார் பள்ளிவாசல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் 30.04.2021 வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பிறகு பள்ளிவாசலை புணரமைப்பது குறித்து வழங்கப்பட்ட மனு தொடர்பான ஆலோசனை கூட்டம் 22.07.21 வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சித் தலைவர்.N. இராமச்சந்திரன் தலைமை வகித்தார். தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வட்டாட்சியர்,தென்காசி காசி விஸ்வநாத ஆலய செயல் அலுவலர்,நகராட்சி நகரமைப்பு அலுவலர்,தென்காசி வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்,தென்காசி காவல் ஆய்வாளர், மற்றும் பஜார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹாஜி M.S காஜா மைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்காசி நகர தலைவர் செய்யது அலி பாதுஷா, SDPI கட்சியின் தென்காசி நகர தலைவர் செய்யது முஹம்மதுமற்றும் பஜார் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், தென்காசி பஜார் பள்ளிவாசல் பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாமல் அதன் மேல் பகுதி இடிந்து கீழே விழக்கூடிய அபாயகரமான சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பள்ளிவாசலை பார்வையிட்டு புணரமைப்பதற்கு முன் நின்று ஆவண செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு மேல்முறையீடு செய்வது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம் விவாதித்து முடிவெடுக்கும் என்றும், தென்காசியில் இந்து,முஸ்லிம் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிரிவினைகளை தூண்டக்கூடிய நபர்களை அனைத்து தரப்பு மக்களும் புறந்தள்ளி விட்டு எல்லா காலங்களிலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்என்று முடிவு எடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..