தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் தடுப்பூசி துவக்க விழா; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் எனும் தடுப்பூசி துவக்க விழா 23.07.2021 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், துவக்கி வைத்தார். பிறந்த குழந்தைகளுக்கு மூன்று தவணைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியானது குழந்தைகளை நியூமோனியா காய்ச்சலில் இருந்துபாதுகாப்பு வழங்குவதற்காக மூன்று தவணைகளாக 6-வது வாரம், 14-வது வாரம் மற்றும் ஊக்கத் தவணையாக 9 வது மாதங்களிலும் வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் 3தவணைக்கு ரூ.12,000 மதிப்புள்ள தடுப்பூசியினை தமிழக அரசு இலவசமாக அனைத்து அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுமருத்துவமனைகளில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும். மேலும், இத்தடுப்பூசியானது நியூமோனியா மற்றும் முளைக்காய்ச்சல் நோயினை கட்டுப்படுத்தக் கூடியதுஎனவும், ஏற்கனவே செயல்படுத்தக்கூடிய தடுப்பூசிகளான ரோட்டா வைரஸ், போலியோ மருந்து மற்றும்தடுப்பூசி, பென்டா வாலண்ட் தடுப்பூசிகளோடு கூடுதலாக இந்த நியூமோகோக்கல் கான்ஜீகேட்தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது, இதன் வாயிலாக தென்காசி மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 5004 குழந்தைகள் இத்தடுப்பூசியினால் பயன் பெறுவார்கள். ஆகையால், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசியினை பெற்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி),ஈ.ராஜா(சங்கரன்கோவில்), மரு.டி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.நெடுமாறன், துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், மகப்பேறு மருத்துவர் மரு.அனிதாபாலின்,மரு. அகத்தியன் உறைவிட மருத்துவர்,மரு. கீதா குழந்தைகள் நல மருத்துவர், மரு.கீர்த்தி, மரு. உத்தமி, மரு. இப்ராகிம், தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், தாய்சேய் நல அலுவலர், செவிலியர்கள் மற்றும் வட்டாரமருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள், சுகாதாரத்துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் குழந்தை தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..