அதிமுக ஆலோசனைக் கூட்டம்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி யில் நடந்தது.கூட்டத்திற்கு, காரியாபட்டி ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்திராஜ் தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பழனி மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மச்சேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகரச் செயலாளர் விஜயன் வரவேற்றார். .கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், அதிமுக கிளைக்கழக தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப் பட்டது. திருச்சுழிஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், நரிக்குடி பூமிநாதன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முககனி, மாநில அண்ணா போக்குவரத்து பிரிவு துணைச் செயலாளர் வீரேசன், மாவட்ட எம்.ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வாலை முத்துச்சாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் தலைவர் ஆவியூர் ரவி, மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பாலமுருகன் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி, மந்திரி ஓடை சண்முகம், பந்தனேந்தல் சுப்பிரமணி, தோப்பூர் ரகுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal