மதுரை ஆண்டாள் புரத்திலுள்ள வசுதாரா வளாகத்தில் 3250 மரங்கள் வளர்க்கும் திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

மதுரை வசுதாரா குடியிருப்பு வளாகமும், மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கமும் இணைந்து 3250 மரங்கள் வளர்ப்பின் மூலம் அதிகமாக ஆக்ஸிஜன் பெறும் குறுங்காடு திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் Dr.அனீஸ்சேகர் தொடங்கி வைத்தார்.பின்பு பேசும் போது, இந்த குறுங்காடு திட்டம் வசுதாரா வளாகத்தை வளமான பூமியாக மாற்றி விட்டது.இந்த வசுதாரா வளாகம் மதுரை மக்களுக்கு நல்ல எடுத்துக் காட்டு.ஒவ்வொரு குடிமக்களும் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைக்க வேண்டும்.மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் பல நல்ல திட்டங்களை மதுரைக்கு அளித்துள்ளது. இன்றைய சூழலில் அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் தேவையான நல்ல ஆக்ஸிஜன், நல்ல சுற்றுப்புறம் நமக்கும் கிடைக்கும்.மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு.மியா வாக்கி திட்டத்தின் மூலம் குப்பை மேடான சிறிய இடத்தை நல்ல இயற்கையான சுற்றுப்புறமாக மாற்றியதற்கு நான் பெருமைப்படுகின்றேன் என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி 3000 மாவட்ட கவர்னர் டாக்டர் . ஆர். ஜெயக்கண், ரோட்டரி 3000 ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரவேல், சசி போம்ரா, ஆகியோர் பங்கேற்றார்கள்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் கார்மேகம், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் திருமலை முத்து ஆகியோர் செய்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் வசுதாரர் குடியிருப்போர் நலச் சங்கம் செயலாளர் விவேகானந்தன் முன்னாள் நீதிபதி மாயாண்டி, பேராசிரியர்.ராஜா கோவிந்தசாமி, மதுரை ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்