பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள் பறிமுதல் கீழக்கரை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு….

இராமநாதபுரம் மாவட்டம் கடலோர காவல் படையினருக்கு தூத்துக்குடி கடலோர காவல் படையிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை சிவகாமிபுரம் பகுதியில் ரகசிய வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் இருந்து வந்த (பொலேரோ பிக்கப்) TN 22 BL 8604 என்கின்ற வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பதினைந்து மூட்டைகளில் தடை செய்யப்பட்ட சுறா பீலி ( சுறா இறக்கை) மற்றும் 5 வெள்ளை சாக்கு மூட்டைகளில் ஏலக்காய் இருந்தது. வாகனத்தின் ஓட்டுநரான சதாம் உசேன் என்பவரை விசாரனை செய்து இவை அனைத்தும் கீழக்கரை சேர்ந்த காசிம் முகமது குடோனுக்கு வந்ததாக தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து காசிம் முகமது குடோனை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் தூத்துக்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டவற்றுடன் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றையும் சேர்த்து தலா 30 கிலோ எடையுள்ள 15 மூட்டைகளிலிருந்த 9 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ சுறாபீலி தலா 50 கிலோ எடையுள்ள 5 மூட்டைகளிலிருந்த 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ ஏலக்காய், 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்புள்ள 55 கிலோ கடல்அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குடோனிலிருந்த கீழக்கரையைச்சேர்ந்த எம்.காசிம்முகமது (50), கே.முகமதுமீராசாகிப்(52), எஸ்.சகாப்தீன்சாகிப் (58) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.