மதுரை மாவட்ட கிராமங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா .

மதுரை மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் விழா இன்று மதுரை கோவில்பாப்பாகுடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்மேற்கு ஒன்றியத் திற்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி, குலமங்கலம், பொதும்பு ஆகிய பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 120 பேருக்குதெர்மாமீட்டர்,ஆக்ஸிமீட்டர்,முகக்கவசம்,கையுறை,கிருமி நாசினி, டவல், மற்றும் அவர்கள் வீட்டுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் சரவணன், ராணி, சாந்தி மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்