நிலக்கோட்டை அருகே கோவிலில் உண்டியலை உடைக்க முயற்சி .அலாரம் அடித்ததால் திருடர்கள் தப்பி ஓட்டம

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி யில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக காரணத்தால் திருவிழா நடக்க வில்லை. அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்பட்டு எண்ணி உண்டியல் பணத்தை வங்கியில் கட்டவில்லை இதை அறிந்த மர்ம ஆசாமிகள் பூட்டிய கோவிலில் காம்பவுண்டு சுவர் மேலே ஏறி உள்ளே குதித்து உண்டியலை உடைக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கோவிலில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் . இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வந்தனர் . மர்ம ஆசாமிகளை தேடி பார்த்தனர். மர்ம ஆசாமிகள் தப்பித்து விட்டதால்  விளாம்பட்டி போலீசில் பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி  இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி  விசாரணை நடத்தினார். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு கோவில் இருந்து ஓடி ஆற்றுப் பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தடியில் நின்றுவிட்டது. அங்கு காலியான மது பாட்டில் ஒன்றும் பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன.விளாம்பட்டி பொதுமக்கள் கோவில் செயல் அலுவலர் உண்டியலை திறந்து எண்ணி பணத்தை வங்கியில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..