Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அரசு சுகாதார துறை இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்..

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அரசு சுகாதார துறை இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அரசு சுகாதார துறை இணைந்து நடத்திய கொரனா தடுப்பூசி  முகாம் இன்று (14/06/2021) காலை 10.15மணிக்கு ஊசி செலுத்தும் பணி தொடங்கியது.

இம்முகாமில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக  திருப்புல்லாணி வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் மேற்பார்வையில் ஊசி செலுத்தும் பணி நடைபெற்றது. மேலும் ஊசி செலுத்த வருபவர்களை அழைத்து வர 3 ஆட்டோக்களும், சதக் கல்லூரி வேன் இரண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்  ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு இராமநாதபுரம் ஐஸ்வர்யா ஹோட்டல் வெஜ் பிரியாணி 600 நபர்களுக்கும், மதிய வேலையை கடந்து வந்தவர்களுக்கு வடை,  டீ, மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுத்தனுப்பினர். இம்முகாமில்  ஆண்கள், பெண்கள் என மொத்தம் 976 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராசீக்தீன் தடுப்பூசி செலுத்துவதின் அவசியத்தை பற்றியும், இதுவரை கீழக்கரை நகரில் 5000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறினார்.

அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள், மருத்துவ குழுவினர், மற்றும் இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடத்திட உதவி செய்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு செயலாளர் சேக் உசேன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

*: மக்கள் டீம் :*

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!