தென்காசி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு;வாசு எம்எல்ஏ திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தன்னார்வ அமைப்பின் சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார். கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வ அமைப்பின் சார்பில் தேசம் முழுவதும் மக்களை காக்கும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அவசர ஊர்தி சேவை, தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்வது என பல்வேறு மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், மருத்துவ சேவைகளை முன்னெடுக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புளியங்குடி ஜின்னா நகர் பகுதியில் “கொரோனா பேரிடர் உதவி மையம் “புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பயனடைகின்ற வகையில் 02-06-2021 புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புளியங்குடி நகர தலைவர் அபூஸாலிஹ் தலைமை தாங்கினார். இந்த பேரிடர் மையத்தை வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதி நாராயணன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம் சேட், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பேச்சாளர் செய்யது முஹமது உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகரச் செயலாளர் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இம்ரான் கான், எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் அஹ்மது மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நகரத் துணைத் தலைவர் ஜார்ஜ், செயலாளர் அப்பாஸ் அமமுக-வின் தென்காசி மாவட்ட அவைத்தலைவர் முஹம்மது (எ) ராஜா, வின்மீன் அங்காடி உரிமையாளர் நாகராஜன், பார்ட் அறக்கட்டளையின் தலைவர் முஹைதீன், திமுகவின் சிறுபான்மை அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பத்திரம் ஷாகுல் ஹமீத், கலந்து கொண்டார்கள். இறுதியாக புளியங்குடி நகர செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீத் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..