காவல் துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர்…திவான் பங்களிப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள சேதுக்கரை மற்றும் உத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் (கீழக்கரை பொறுப்பு) ராகவேந்திரா ரவி தலைமையிலும் கீழக்கரை ஆய்வாளர் செந்தில் குமார் முன்னிலையில் சேதுக்கரை மற்றும் உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று (02/06/2021) உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது திருப்புலானி சார்பு ஆய்வாளர் சந்தான போஸ்ட், திருப்புல்லாணி சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கச்சாமி, தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், கீழக்கரை தனிப்பிரிவு காவலர் சேகர், திருப்புலானி தனிப்பிரிவு காவலர் கலை மன்னன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் இந்த உணவை ராமநாதபுர சமஸ்தான திவான் பழனிவேல் ஏற்பாடு செய்தார்.