கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID Home Care Centre நாளை (31/05/2021) திறப்பு..

கீழக்கரை ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்புடன் (HPSAA) இணைந்து Aasi COVID home care centre நாளை (31/05/2021) திறக்கப்பட உள்ளது.  இந்த மையம் மூலம்  கோவிட் நோய் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதற்கும், மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கும் கீழக்கரையிலேயே  HPSAA (ஹமீதியா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு)  அலுவலகத்தில் மருத்துவர் ஆசிக் அமீன் (இராமநாதபுரம்) aasi COVID home care center  திறக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் இருந்து ஆலோசனை வழங்குவார்கள்.  இச்சேவை (திங்கள் கிழமை-31-5-2021) 10 மணியில் இருந்து தொடங்கி, இந்த பேரிடர் காலம் அதிகாரபூர்வமாக கட்டுக்குள் உள்ளது என அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவ மையத்தை இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் காதர்பாட்சா நாளை (31/05/2021) காலை திறந்து வைக்க உள்ளார் என HPSAA செயலாளர் கபீர் B.Arch வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal