Home செய்திகள் பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்க முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.

பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்க முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.

by mohan

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது:நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளேன்.மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முன் களப் பணியாளர்களுக்குப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கை நிறைவேற்றியப் பிறகு, 1 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்களும், 20 ஆயிரம் பேருந்துகளும் இருக்கக் கூடிய போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படும்.மாவட்டந்தோறும் தேவைப்பட்டால், முதல்வர் மற்றும் சுகாதார மந்திரிகளின் ஆலோசனைப் படி, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி, ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!