Home செய்திகள் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பியதால் கொரோனோ பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பியதால் கொரோனோ பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை

by mohan

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் ஒரு சில படுக்கை மட்டுமே காலியாக உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பியதால் கொரோனோ பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை மதுரை மாவட்டத்தில்நேற்று ஒரே நாளில் 1024 பேர் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தொற்று வினால்இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.6561பேர் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில்பிற மாவட்டத்தை சேர்ந்த 476 பேர் மதுரை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் 1561 படுக்கைகள் உள்ள நிலையில் 1458 படுக்கைகள் நிரம்பியுள்ளது 103 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் இன்று அதுவும் நிரம்பியது. இதனால் புதிதாக சிகிச்சை பெற வருபவர்கள் உடனடியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதிதாக தொற்று பாதிக்கப்பட்டு வருவோர் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து புதிதாக வருபவர்களுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு வருகிறது.மதுரை அரசு மருத்துவமனையில் 1150 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ள நிலையில் அனைத்து ஆக்சிஜன் படுக்கை நிரம்பியுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் 1319 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 1200 படுக்கைகள் நிரம்பியது, 119 படுக்கை மட்டுமே காலியாக உள்ளது.கொரோனோ சிகிச்சையளிக்கும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கே ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் புதிதாக வரும் உள் நோயாளிகளை அனுமதிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.கொரோனோ பரவலை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் 70 சதவீதமும் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 30 சதவீதம் பரவல் ஏற்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!