கீழக்கரையில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம்..

கொரோனவைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலை உள்ளதால் கீழக்கரை காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்வதற்காக கீழக்கரையில் உள்ள புதிய பேருந்து நிலையம், விஏஓ அலுவலகம், நகராட்சி அலுவலகம், இந்து பஜார், கமுதி பால் கடை மற்றும் முஸ்லீம் பஜார் பகுதியில் ஒலிபெருக்கி வைத்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும்,  கட்டாயம் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும், அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தினமும் கபசுர குடிநீர் அருந்த வேண்டும், சுடுதண்ணி பருக வேண்டும்.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி தென்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், அல்லது அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், சுடுதண்ணியில் நீர்ஆவி பிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..