இயற்கையில் ஆக்சிசன் தரக்கூடிய மரங்களை வெட்டி எரிக்கின்ற அவலநிலை. மரங்களை வெட்டாமல் சாலைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டி வருகின்றனர் .ஒவ்வொரு மரமும் 50 ஆண்டு 60 ஆண்டு 100 ஆண்டு பழமை வாய்ந்தது அதில் குறிப்பாக 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆல மரத்தை வெட்டி எடுத்துவிட்டு சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .அதிகரித்து கொரோனா தொற்றால் நோய் பாதித் மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில். இயற்கை அன்னை கொடுத்த இயற்கையான ஆக்சிசன் மரங்கள் மூலமே பெறப்படுகிறது மரங்களை வெட்டி அழித்து விட்டால் ஆக்சிசன் தட்டுப்பாடு அதிகமாக உருவாகும் உயிர் பலியும் அதிகரிக்கும் .அதுவும் அரசு மருத்துவமனை அருகே உள்ள மரங்களை வெட்டுவதால் நோய் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதால் ஆக்சிசன் அவர்களுக்கு கிடைக்காது தட்டுப்பாடு ஏற்படும் மூச்சுத்திணறல் காரணமாக உயிர் பலியும் அதிகரிக்கும் .இதை கருத்தில் கொண்டு மரங்களை வெட்டாமல் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் நவீன கருவிகள் மூலம் மரங்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நட்டு வைத்து விட்டு சாலை விரிவாக்கப் பணிகளை செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடக் கூடிய பசுமை ஆர்வலர்களும் கோரிக்கை.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..