தயார் நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தேர்தல் மையம் மற்றும் அலுவலர்கள்..

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் தேர்தல் அலுவலர்கள் உள்ளனர். அதே போல்  முதல்முறையாக கொரான நோயாளிகளுக்காக 6 முதல் 7 மணி வரை சிறப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேர்தல் அலுவலர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. அதே போல்  வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு முக கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்ட உள்ளது.

வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்

108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் கொரான நோயாளிகள் வாக்களிக்க வரும் போது தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கவச உடை வாங்கப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகித்த கவசஆடைகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த தனியாக உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் முதல் முறையாக கொரான நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் 288 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன .

இவற்றில் பதட்டமான 74 வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவ படை மற்றும் கர்நாடக ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..