முதலைக்குளம் கிராமத்தில் கருப்புசாமி கோவில் கண்மாயில் மீன் பிடிக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 500ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடமும் சித்திரை 2ம ;தேதியான இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் முதலைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று கண்மாயில் வலைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மீன்களை தேர்வு செய்து மீன்களை பிடித்து சென்றனர்.

கண்மாயில் கட்லா, கெண்டை,கெழுத்தி,உழுவை உள்ளிட்ட பல ரகங்களில் மீன்களை கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த திருவிழாவை கொண்டாடினர். மேலும் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக இருசக்கரவாகனங்களில் பலர் வந்திருந்தனர். மேலும் கொரோன விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக மீன் பிடித்ததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

உசிலை சிந்தனியா