Home செய்திகள் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.

by mohan

 மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!