Home செய்திகள்உலக செய்திகள் சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற, இங்கிலாந்து உயிரியலாளர் ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 2013).

சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற, இங்கிலாந்து உயிரியலாளர் ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10, 2013).

by mohan

ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards) செப்டம்பர் 27, 1925ல் மான்செஸ்டர் இங்கிலாந்தில் பிறந்தார். மத்திய மான்செஸ்டரில் உள்ள விட்வொர்த் தெருவில் உள்ள மான்செஸ்டர் மத்திய உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார். பாங்கூர் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை படிப்பை முடித்தார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் விலங்கு மரபியல் மற்றும் கருவியல் நிறுவனத்தில் படித்து 1955ல் முனைவர் பட்டம் பெற்றார். கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஒரு போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சி, ஒரு வருடம் கழித்து மில் ஹில்லில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சேர்ந்தார்.

ராபர்ட் எட்வர்ட்சு 1960களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். முன்னோடி மருத்துவர் பாட்ரிக் ஸ்டெப்டோவுடன் (1913 – 1988) இணைந்து இவர் நடத்திய ஆய்வுகள் 1978 ஆம் ஆண்டில் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்க வழிவகுத்தது. பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை ஜூலை 25, 1978ல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது. அந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும், கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் வகுத்த இயற்கைச் சட்டத்தை மதிக்காமல் செயற்கைமுறையில் கருத்தரிக்க மனிதர் முனைவது அறநெறிக்கு எதிரானது என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. மேலும், ஒரு கருத்தரிப்பு வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் அதற்குத் தயாரிப்பாக வேறுபல கருக்களையும் உருவாக்கவேண்டும். பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படாத பல கருக்கள் சோதனைக் கூடத்தில் பாதுகாக்கப்படவேண்டும். பயன்படுத்தப்படாத கருக்கள் அழிக்கப்பட நேரிடும். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது. சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு ஏப்ரல் 10, 2013ல் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!