மதுரையில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் வங்காமல் ஹோட்டல் நடத்திய உரிமையாளருக்கு 2 மாதம் சிறைத் தண்டனை

மதுரை தமிழ் சங்கம் ரோட்டில் ஜமுனா உணவகம் நடத்தி வந்தவர் துளசி ராஜ். இவர் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து முறையாக உரிமம் வாங்காமல் நடத்தி வந்துள்ளார்.இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் அவர் உரிமம் வாங்கவில்லை. வேடத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினர். அதன்பிறகும் அவர் உரிமம் வாங்காமல் ஓட்டல் நடத்தி வந்தார். இதனால், மதுரை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மதுரை மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் ஹோட்டல் உரிமையாளர்கள் அவருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply