அரசு மருத்துவமனைகளில் தாமதமில்லா சிகிச்சை தொடர்பான வழக்கு முடித்து வைப்பு.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் எனது தாயாரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டோம். கொரோணா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதற்கு கால தாமதம் ஆனதால் எனது தாயார் உயிரிழந்தார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனால் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது, அதுபோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டால் பல உயிரிழப்புகள் தடுக்கபடும்.மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.மேலும் அனைத்து வசதிகளும் ஏற்ப்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்து, குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், கொரோணா காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டது, மேலும் அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்திவைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply