நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த, மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1992).

டேனியல் போவே (Daniel Bovet) மார்ச் 23, 1907ல் சுவிட்சர்லாந்தில் சுவிட்சர்லாந்தில் பிறந்து இத்தாலிக்கு குடிபெயர்ந்தார். 1927ல் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1929ல் முனைவர் பட்டம் பெற்றார். 1937 ஆம் ஆண்டில் ஆன்டி ஹிஸ்டமைன் கண்டுபிடித்தார். மேலும் இது நியூட்ரோ ட்ரான்ஸ்மீட்டாரை ஹஸ்டமைன் தடுக்கும் மருந்தாகவும், ஒவ்வாமை மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவருடைய ஆராய்ச்சிகளில் கீமோதெரபி, சல்ஃபா மருந்துகள், சிம்பத்தடிக் நரம்பு மண்டலம், போன்றவற்றிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்தமைக்காக 1957ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

1965ல் புகைபிடிப்போரின் அறிவுத்திறன் வளர்கிறது என்ற ஆய்வை தனது ஆய்வுக் குழு மூலம் முன்வைத்தார். 1929 முதல் 1947 வரை பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிருவனத்தில் பணியாற்றினார். 1947 முதல் ரோமின் தேசிய சுகாதார நிருவனத்தில் பணியாற்றினார். 1964ல், சசாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். 1969 முதல் 1971 வரை ரோமின் தேசிய ஆராய்ச்சிக் கவுன்சிலிலும் பின் 1982 வரை ரோமின் சாபியென்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே ஏப்ரல் 08, 1992ல் தனது 85 வது வயதில் ரோம், இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply