மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின்படி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு அவர்களுக்கு அதிமுக மாவட்ட பிரதிநிதி முருகன் மற்றும் அதிமுக பிரமுகர் ஏழுமலை ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி 50க்கும் மேற்பட்டோர் மேளதாளத்துடன் வரவேற்றனர். அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனா எம்எஸ் நைனா கண்ணு பேசுகையில் ; மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தருவேன் தருவேன் என்றும் அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை விளக்கி வாக்கு சேகரித்தார். தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் ,செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே கே மணி ,மாவட்ட பிரதிநிதி மேல்பெண்ணாத்தூர் முருகன், முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில துணைத் தலைவர் சி கே ஆர் கமல் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அறவாழி ,மாவட்ட எஸ்சி எஸ்டி தலைவர் ராஜி, மாவட்ட தலைவர் அருள்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமு , கண்ணுப்பிள்ளை, சிவப்பிரகாசம், நீலகண்டன் , உத்தரகுமார் கிளை செயலாளர் குமார், சின்னராஜ், முருகேசன், முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்