செங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ் அன்பு அவர்கள் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான புதிய குயிலம் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கி டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் பரந்தாமனுடன் இனைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிறகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது புதிய குயிலம் பகுதியில் தேமுதிக கிளை செயலாளர் ஜிஎஸ் ஜெமினி மற்றும் ஒன்றி கேப்டன் மன்ற துனை செயலாளர் கோபி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆலத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் அப்போது அப்பகுதி மக்களிடையே பேசிய வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றவுடன் சுமார் ஆறு மாத காலங்களில் இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு அப்பகுதி தாய்மார்களின் காலில் விழுந்து ஆசி பெற்று வாக்கு சேகரித்தார் அப்போது செங்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜேசிபி சங்கர் நகர கழக செயலாளர் ஏபிஎஸ் அசோக்குமார் மாவட்ட நிர்வாகி குயிலம் சிவா பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து நடை பயணமாக பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த வேட்பாளர் அன்வராபத் பரமனந்தல் பழையகுயிலம் ஆள புத்தூர் புதுப்பட்டு கொட்டாவூர் குப்பநத்தம் காயம்பட்டு வளையாம்பட்டு தீத்தாண்டப்பட்டு சென்னசமுத்திரம் பக்கரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு அப்பகுதி மக்களிடையே தொடர்ந்து பேசி வருகிறார் வழிநெடுகிலும் தேமுதிக தொண்டர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் பெண்களும் ஆலத்தி எடுத்து பட்டாசு வெடித்து தேமுதிக வேட்பாளர் அன்புவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..