சென்னையில் கீழக்கரை எழுத்தாளர் மஹ்மூது நெய்னா எழுதிய “கீழக்கரை வரலாறு” நூல் வெளியீட்டு விழா..

தமிழ் மரபு அறக்கட்டளை பண்ணாட்டு அமைப்பு மற்றும் இப்போது டாட் காம் இனைந்து வெளியிட்ட  எஸ்.மஹ்மூது நெய்னா எழுதிய “கீழக்கரை வரலாறு” நூல் வெளியீட்டு விழா  28.03.2021 ஞாயிறு காலை 10:00 மணியளவில் சென்னை, தி.நகர், தக்கர் பப்பா வளாகம், வினோபா அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர். க.சுபாஷினி தலைமை வகித்து கருத்துரை வழங்கினார்.   சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் அறங்காவலர் பி.எஸ்.ஏ அஷ்ரப் புஹாரி முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் கீழக்கரை இஸ்லாமியா குழும பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹீம் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.

கீழக்கரை தாஸிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா தாவூத் சிறப்புரை வழங்கினார், சென்னை ராஜா ராணி டாக்டர். பிரகதீஷ் பாராட்டுரை வழங்கினார். நூலாசிரியர் எஸ். மஹ்மூது நெய்னா ஏற்புரை வழங்கிய இந்த நிகழ்ச்சியை இப்போது.காம் நிறுவனர் பீர் முகம்மது தொகுத்து வழங்கினார்.

இறுதியில் இப்போது.காம் மார்க்கெட்டிங் மேலாளர் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில்  இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.